இந்திய டிரைவிங் லைசென்ஸ் மூலம் நமது நாட்டில் மட்டுமல்லாது, சில வெளிநாடுகளிலும் வாகனம் ஓட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்திய ஓட்டுநர் உரிமத்தை அங்கீகரிக்கும் 15 நாடுகளை பற்றி அறிந்து கொள்ளலாம். 1. அமெரிக்கா அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் இந்திய DL வைத்திருப்பவர்கள் வாடகை கார் ஓட்ட அனுமதிக்கின்றன. அதை வைத்துக் கொண்டு இங்கு 1 வருடம் வாகனம் ஓட்டலாம், ஆனால் உங்கள் ஆவணங்கள் முறையானதாகவும் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். DL உடன், அமெரிக்காவிற்குள் (America) நுழைந்த தேதி உள்ள I-94 என்னும் படிவத்தை எடுத்துச் செல்ல வேண்டும். 2. நியூசிலாந்து இந்த அழகான நாட்டில் கூட ஒரு வருடத்திற்கு இந்திய ஓட்டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டி மகிழலாம். தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள இரண்டு பெரிய தீவுகள் மற்றும் பல சிறிய தீவுகளைக் கொண்ட இந்த நாட்டில் வாகனம் ஓட்டுவது ஒரு வித்தியாசமான அனுபவம் ஆகும். 3. ஜெர்மனி ஜெர்மனி ஆட்டோமொபைல்களின் நாடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு இந்திய உரிமத்தில் 6 மாதங்களுக்கு வாகனம் ஓட்டலாம். Mercedes-Benz, Audi மற்றும் BMW ஆகியவை இங்கு வாகன உற்