ELECTRIC VEHICLE -மின்சார வாகனம்
இந்தியாவில் பெட்ரோல் வாகனங்கள் அதிகரித்து வருவதால் காற்று மாசு ஏற்பட்டு வருகிறது. இதனால் இயற்கை மற்றும் மனித வளங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் தற்பொழுது எலக்ட்ரிக் பைக், எலக்ட்ரிக் கார்களை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில், தற்போது மத்திய மற்றும் மாநில அரசுக்குச் சொந்தமான வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்றக்கோரி, மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு மத்திய மின்துறை அமைச்சர் ஆர். சிங் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்; மின்சார வாகனம் பயன்படுத்த ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. மக்கள் மின்சார வாகனம் வாங்குவது குறித்தும்., மானியம் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் உட்பட அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் தாங்கள் பயன்படுத்தும் அரசு வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் கூறியுள்ளார்.. இதை அரசு பின்பற்றுவதன்