மீறினால் போக்குவரத்து விதிமீறல் கீழ் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.பலரும் தங்கள் கற்பனை திறத்தை வெளிகாட்ட வாகன பதிவெண் 5088 என்பதை ஆங்கிலத்தில் 'பாஸ்' என்று படிக்கும் வகையில் ஸ்டைலாக எழுதி வலம் வருகின்றனர். சில ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்தி வாங்கிய ராசியான எண்ணை பெரிதாகவும், மற்ற எழுத்துக்களை சிறியதாகவும் வைத்துள்ளனர். சிலர் கட்சி தலைவர்கள், குடும்ப படத்தை கூட நம்பர் பிளேட்டில் இடம்பெற செய்துள்ளனர். இதனால் குற்றச்சம்பவங்களின்போது பதிவெண்ணை ஆய்வு செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது.இதைதவிர்க்க, அங்கீகரிக்கப்பட்ட நம்பர் பிளேட் வடிவமைப்பைதான் வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர். சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களில் வெள்ளை நிற பின்னணியில் கருப்பு நிறத்தில் பதிவெண் எழுத வேண்டும். வணிகரீதியிலான வாகனங்களில் மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு நிறத்தில் பதிவெண் எழுத வேண்டும். நம்பர் பிளேட்டில் ஸ்டைலான பேன்சி எண்கள், பெயர்கள், படங்கள், ஓவியம் போன்றவை கண்டிப்பாக இடம் பெறக்கூடாது. மீறினால் போக்குவரத்து சட்டப்பிரிவு 177ன்கீழ் ரூ.100...